spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னையில் 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

-

- Advertisement -

சென்னையில் 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

ஜேம்ஸ் வால்ட்டர் என்பவருக்கு சொந்தமான ஏற்றுமதி நிறுவனம் மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திவருகிறது.

Oceanic International Edible

சென்னையில் மேற்கு தாம்பரம், வேளச்சேரி, அமைந்தகரை, கோடம்பாக்கம் உள்ளிட்ட 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. ரூ.225 கோடி வங்கி மோசடி தொடர்பான வழக்கில் ஜேம்ஸ் வால்ட்டர் என்பவருக்கு சொந்தமான ஏற்றுமதி நிறுவனம் மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

we-r-hiring

கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள இறால் ஏற்றுமதி நிறுவனம் ரூ.225 கோடி கடன் மோசடி செய்ததாக சிபிஐ பதிவு செய்த நிலையில் சோதனை நடைபெற்றுவருகிறது. சென்னை சூளைமேட்டில் இயங்கும் Oceanic International Edible நிறுவனத்தின் 4 இயக்குநர்கள் மீது CBI வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்ததாக தனியார் ஏற்றுமதி நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது.

MUST READ