spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகாவிரி ஆணையக் கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு வெளிநடப்பு!

காவிரி ஆணையக் கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு வெளிநடப்பு!

-

- Advertisement -

 

Tamil Nadu walkout from Cauvery Commission meeting
File Photo

டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு வெளிநடப்புச் செய்துள்ளது.

we-r-hiring

மழைக்காலக் கூட்டத்தொடரில் மக்களவையில் 22 மசோதாக்கள் நிறைவேற்றம்!

தமிழக காவிரி பாசனப் பகுதிகளில் மழைப் பெய்யாததாலும் காவிரியில் தண்ணீர் திறந்ததாலும், வாய்க்கால்களில் நீர்வரத்து இல்லாததால் பல ஏக்கரில் நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் காவிரியில் மேலும் நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு அரசு சார்பில் நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா கலந்து கொண்டார். அப்போது, தமிழ்நாட்டுக்கு முறைப்படி தண்ணீர் வழங்க வலியுறுத்தியதை கர்நாடகா ஏற்கவில்லை என குற்றம்சாட்டி, சந்தீப் சக்சேனா கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

ஒரே வகுப்பில் படிக்கும் சக மாணவரை வெட்டிய மாணவர்கள்!

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, “ஆகஸ்ட் 9- ஆம் தேதி வரை 37.9 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் தர வேண்டும். 37.9 டி.எம்.சி. நீர் தர வேண்டும் என்பதை கர்நாடகா அரசு ஏற்கவில்லை. தமிழகத்தின் கோரிக்கையை கர்நாடகா அரசு ஏற்காததால் வெளிநடப்புச் செய்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ