குடியரசு தலைவருடன் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் சந்திப்பு நடைப்பெற்றது. குடியரசு துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை மாநிலங்களவையை வழிநடத்தவுள்ள நிலையில் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.
நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். நாட்டின் குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததனால் மாநிலங்களவை அவை தலைவர் பதவியும் காலாவதியானது. இந்நிலையில் நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு அவை தலைவர் இல்லாத நேரங்களில் துணைத் தலைவர் அவையை வழிநடத்த வேண்டும் என்பதன்படி இன்று மழைக்கால கூட்டத் தொடரின் இரண்டாவது நாளில் மாநிலங்களவையை துணைத்தலைவர் ஹரிவன்ஸ் வழி நடத்தினார்.
மேலும் இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை நடத்தி முடிக்கும் வரை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையை ஹரிவன்ஸ் வழிநடத்தவுள்ளார். இந்நிலையில் மரியாதை நிமித்தமாக இன்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துள்ளார். நடப்பு மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் ஹரிவன்ஸ் மாநிலங்களவையை வழி நடத்துவார் என தகவல்கள் வரும் நிலையில் இன்று குடியரசுத் தலைவருடன் நடைபெற்றுள்ள சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது.
விருதுநகரில் 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து – மாவட்ட நிர்வாகம் அதிரடி



