spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவிருதுநகரில் 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து – மாவட்ட நிர்வாகம் அதிரடி

விருதுநகரில் 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து – மாவட்ட நிர்வாகம் அதிரடி

-

- Advertisement -

விருதுநகர் மாவட்டத்தில் 46 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.விருதுநகரில் 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து – மாவட்ட நிர்வாகம் அதிரடிவிருதுநகர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட  பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றது. இந்த ஆலைகளில் ஆயிரக்கணக்கானோர் பட்டாசு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பட்டாசு ஆலைகளின் அடுத்தடுத்து ஏற்படும் வெடி விபத்தினை தடுப்பதற்க்கும் பெரும் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க மாவட்டம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ள தீர்பாயம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து வெடிவிபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் போர்மேன்கள், பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு தொழிலக பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த பாதுகாப்பு பயிற்சி வகுப்புகளில் பல பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்கள் பங்கேற்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது.

இதனையடுத்து பட்டாசு ஆலைகளை ஆய்வு மேற்கொள்ள தீர்ப்பாயம் உத்தரவிட்டது. தீர்ப்பாயத்தின் உத்தரவை அடுத்து 15 குழுக்கள் மூலம் கடந்த  வாரம் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்து 400-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ள 46 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்காததாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பிரியவேண்டும் என்ற அச்சத்தில் குழந்தையை கொன்ற தந்தை…

we-r-hiring

MUST READ