
சுதந்திர தினத்தையொட்டி, ‘தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம்’ ஆறு காவல்துறையினருக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது.

4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சுதந்திர தினத்தையொட்டி, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறு காவல்துறை அதிகாரிகளுக்கு ‘தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்’ அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வட சென்னை காவல்துறையின் கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க், கோவை மாவட்ட காவல்துறை எஸ்.பி. பத்ரிநாராயணன், தேனி மாவட்ட காவல்துறை எஸ்.பி. டோங்கரே பிரவீன் உமேஷ், சேலம் ரயில்வே காவல்துறை டிஎஸ்.பி. குணசேகரன், நாமக்கல் காவல் உதவி ஆய்வாளர் முருகன், நாமக்கல் காவலர் குமார் ஆகியோருக்கு தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்- ஐ.சி.சி. வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
வரும் ஆகஸ்ட் 15- ஆம் தேதி சுதந்திர தினத்தன்று சென்னையில் நடைபெறும் விழாவில் காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கங்களை வழங்கி கௌரவிப்பார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.