மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
சரத்குமார், அமிதாஷ் கூட்டணியின் பரம்பொருள்…. ரிலீஸ் தேதி அறிவிப்பு!
முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை சேர்த்தது. இந்திய அணி தரப்பில், அக்சர் பட்டேல், சாஹல், முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 17 ஓவரில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 179 ரன்களை எடுத்தது. இதனால் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
ரீரிலீஸ் செய்யப்படும் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’!
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக யஷ்ஸ்வி ஜெய்ஷ்வால் 84 ரன்களையும், சுப்மன் கில் 77 ரன்களையும் எடுத்தனர்.
ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 2-2 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்தது.