Homeசெய்திகள்விளையாட்டுஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்- ஐ.சி.சி. வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்- ஐ.சி.சி. வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

-

 

world-cup

இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கான டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

எல்.ஐ.சி. லாபம் ஒரே ஆண்டில் 14 மடங்கு அதிகரிப்பு!

இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் திருவிழா நடைபெறவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணை இறுதிச் செய்யப்பட்டுள்ள நிலையில், டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

பயிற்சி ஆட்டங்கள் மற்றும் இந்தியாவைத் தவிர்த்து பிற அணிகள் விளையாடும் ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை, வரும் ஆகஸ்ட் 25- ஆம் தேதி தொடங்குகிறது. கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரத்தில் இந்திய அணி விளையாடும் ஆட்டங்களின் டிக்கெட் விற்பனை வரும் ஆகஸ்ட் 30- ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை, புனே, டெல்லியில் இந்திய அணி விளையாடும் ஆட்டங்களின் டிக்கெட் விற்பனை வரும் ஆகஸ்ட் 31- ஆம் தேதி தொடங்குகிறது.

தர்மசாலா, லக்னோ, மும்பையில் உள்ள மைதானங்களில் இந்திய அணி விளையாடும் ஆட்டங்களின் டிக்கெட் விற்பனை வரும் செப்டம்பர் 1- ஆம் தேதியும், பெங்களூரு, கொல்கத்தாவில் உள்ள மைதானங்களில் இந்திய அணி விளையாடும் ஆட்டங்களின் டிக்கெட் விற்பனை வரும் செப்டம்பர் 2- ஆம் தேதியும் தொடங்குகிறது.

டிவிஎஸ் எஸ்சிஎஸ் ஆரம்பப் பங்கு வெளியீடு தொடக்கம்!

அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் இந்திய அணி விளையாயிடும் ஆட்டங்களின் டிக்கெட் விற்பனை வரும் செப்டம்பர் 03- ஆம் தேதி தொடங்குகிறது. அரையிறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் செப்டம்பர் 15- ஆம் தேதி விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ