- Advertisement -

நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் லாபம், ஒரே ஆண்டில் 14 மடங்கு அதிகரித்துள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 9,544 கோடி ரூபாய் நிகர லாபம் கிடைத்ததாக எல்.ஐ.சி. தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கிடைத்த 683 கோடி ரூபாய் லாபத்துடன் ஒப்பிடுகையில், சுமார் 14 மடங்கு அதிகமாகும்.
“இந்தியா கூட்டணி அல்ல; ஈகோ கூட்டணி”- பிரதமர் நரேந்திர மோடி கடும் விமர்சனம்!
எனினும், முதல் பிரீமியம் மூலம் கிடைத்த வருவாய் 6,811 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளதாக பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் எல்.ஐ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் வருவாய் 1 லட்சத்து 88 ஆயிரத்து 749 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் எல்.ஐ.சி. கூறியுள்ளது.