Homeசெய்திகள்இந்தியாநம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

-

 

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
Photo: SANSAD TV

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி இரண்டே கால் மணி நேரம் பதிலுரை ஆற்றினார்.

“அதிகாரத்தின் மீதே எதிர்க்கட்சிகளுக்கு ஆசை”- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு!

மக்களவையில் மாலை 05.05 மணிக்கு பேசத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, இரவு 07.20 மணி உரையாற்றினார். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், பதிலுரையாற்றினார்.

அதேபோல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது. காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்ததால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க யாருமில்லை.

“ஏன் மணிப்பூர் செல்லவில்லை என்று கேட்டோம், அதற்கு பிரதமர் நரேந்திர மோடி எந்த பதிலையும் அளிக்கவில்லை. மணிப்பூர் வன்முறை ஏற்பட்டு 80 நாட்கள் கடந்த பிறகு தான் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பிரதமர் பதிலளிக்கவில்லை” என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான பிரதமரின் உரைக்கு பதிலடி தரும் வாய்ப்பைப் புறக்கணித்தார் கௌரவ் கோகாய். பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்த போது, எதிர்க்கட்சிகள் வெளிநடப்புச் செய்ததால் பதிலடி தருவதற்கான வாய்ப்பை இழந்தார். பிரதமரின் உரை முடிந்த பிறகு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மூன்று முறை கௌரவ் கோகாய் பெயரை அழைத்தார்.

“இந்தியா கூட்டணி அல்ல; ஈகோ கூட்டணி”- பிரதமர் நரேந்திர மோடி கடும் விமர்சனம்!

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்ததாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆதிர் ரஞ்சன் சௌத்ரிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

MUST READ