
டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் ஆரம்பப் பங்கு வெளியீடு தொடங்கியுள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றும், தமிழகத்தை அடிப்படையாகக் கொண்டதுமான டிவிஎஸ் குழுமத்தின் ஒரு அங்கம் தான் டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூசன்ஸ் (TVS Supply Chain Solutions). 16 ஆண்டுகளுக்கு மேலாக இந்நிறுவனம், சர்வதேச அளவில் சரக்கு போக்குவரத்து கிடங்குகள் உள்ளிட்ட சேவைகளை அளித்து வருகிறது. இந்தியாவில் சரக்கு போக்குவரத்து சேவை வழங்கும் மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றான இது, 26 வெளிநாடுகளிலும் தனது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், தனது வணிகத்தை மேம்படுத்துவதற்கும், கடன்களை அடைக்கவும் ஐபிஓ அதாவது, ஆரம்பப் பங்கு வெளியீடு மூலம் 880 கோடி ரூபாய் நிதி திரட்டுகிறது. வியாழனன்று தொடங்கிய பங்கு விற்பனை, வரும் ஆகஸ்ட் 14- ஆம் தேதி வரை நீடிக்கவிருக்கிறது. இந்த விற்பனையில் 10% பங்குகள் சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பங்கு ஒன்றின் விலை 187 ரூபாய் முதல் 197 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
“இந்தியா கூட்டணி அல்ல; ஈகோ கூட்டணி”- பிரதமர் நரேந்திர மோடி கடும் விமர்சனம்!
பங்கு ஒன்றின் முக மதிப்பு 1 ரூபாயாகும். முதலீட்டாளர்கள் குறைந்தது 76 பங்குகள் கொண்ட ஒரு தொகுப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது சிறு முதலீட்டாளர் ஒருவர் குறைந்தபட்சம் 15,000 ரூபாயை முதலீடாக செய்ய வேண்டியிருக்கும். தொழிற்துறையில் அனுபவம் வாய்ந்த டிவிஎஸ் குழுமத்தின் அங்கம் என்பதுடன் வளர்ந்து வரும் சரக்குப்போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டுள்ளதும், இந்த பங்கு வெளியீட்டில் சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது.