spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்தனியார் தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா -  ஊழியர் கைது

தனியார் தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா –  ஊழியர் கைது

-

- Advertisement -

தனியார் தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா –  ஊழியர் கைது

உதகை அருகே தனியார் தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா பொறுத்தி பெண்களை வீடியோ எடுத்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ரகசிய கேமரா வைத்ததாக தனியார் தங்கும் விடுதி ஊழியர் ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.

தனியார் தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா - விடுதி ஊழியர் கைது
கைது செய்யப்பட்ட சிண்டு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதி முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்திருப்பதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக மசினகுடி, ஆச்சக்கரை பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

we-r-hiring

இந்த நிலையில் ஆச்சக்கரை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்று கேரளா மாநிலம் கோழிகோட்டை சார்ந்த சாஹத் (22) தனது மனைவியுடன் தங்கிய போது அவர்களது அறையின் கழிவறையில் ரகசிய கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதனை தொடர்ந்து மசினகுடி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலிசார் நடத்திய விசாரணையில் கழிவறையில் ரகசிய கேமரா பொறுத்தியதாக விடுதி ஊழியர் சிண்டு (22) என்பர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அந்த இளைஞர் கூடலூர் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கபட்டார்.

மசினகுடி பகுதிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து தங்கி செல்லும் நிலையில் ரகசிய கேமரா பொறுத்தி பெண்களை வீடியோ எடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

MUST READ