spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைரயில் நிலையத்தில் தவித்த மூதாட்டி – இன்றைய உறவு முறையின் அவலம்

ரயில் நிலையத்தில் தவித்த மூதாட்டி – இன்றைய உறவு முறையின் அவலம்

-

- Advertisement -

ரயில் நிலையத்தில் தவித்த மூதாட்டி – இன்றைய உறவு முறையின் அவலம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் திக்கு தெரியாமல் பரிதவித்த மூதாட்டியை மீட்ட ரயில்வே போலீசார் இளைய மகனிடம் ஒப்படைத்து எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

பெற்ற தாயை யார் பார்த்து கொள்வது என்ற அண்ணன் தம்பி இடையே ஏற்பட்ட தகராறில் மூதாட்டியை மூத்த மகன் பரிதவிக்கவிட்டு சென்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று காலை 6.30 மணி அளவில் தென்மாவட்டத்தில் இருந்து ரயிலில் வந்த 90 வயது மூதாட்டி ஒருவர் தனது மகனுடன் இறங்கியுள்ளார்.

we-r-hiring

அவரது மகன், அந்த மூதாட்டியை பிளாட் பாரத்தில் உள்ள இருக்கை யில் அமர வைத்து விட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக காணவில்லை. இதனால் பதற்றமடைந்த அந்த மூதாட்டி கண்ணீருடன் பரிதவித்து கொண்டிருந்தார்.  நீண்ட நேரமாக அழுது கொண்டிருப்பதை பார்த்த மற்ற பயணிகள் பின்பு அவரை தேற்றி ஏன் நீண்ட நேரமாக இங்கே இருந்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டனர்.

ரயில் நிலையத்தில் தவித்த மூதாட்டி – இன்றைய உறவு முறையின் அவலம்

அதற்கு பதிலளித்த மூதாட்டி எனது பெயர் முத்துகாமாட்சி (90) என்றும் நான் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இருந்து எனது மூத்த மகன் காமராஜனுடன் ரயிலில் வந்தேன். என்னை இங்க உட்கார வைத்துவிட்டு எனது மகன் வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு  சென்றவர் நீண்ட நேரமாகியும் காணவில்லை என்று  கண்கலங்கியபடி கூறியுள்ளார்.

இதனை அடுத்து சக பயணிகள் முதாட்டி குறித்து ரயில்வே போலீசாருக்கு தெரிவித்தனர். காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் விசாரணை செய்து மூதாட்டி வைத்திருந்த மஞ்சப்பையை சோதனை செய்த போது அதில் இருந்த துண்டு சீட்டில் எழுதபட்டிருந்த இளைய மகன் கணேசனின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு இன்று வர வைத்த போலீசார் விசாரனை செய்ததில் பெற்ற தாயை யார் பார்த்து கொள்வது என்ற போட்டியில் தனது அண்ணன் இது போன்ற செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து   மூதாட்டியை ஒப்படைத்ததுடன் எச்சரிக்கை செய்த போலீசார்  அறிவுரை கூறி அனுப்பினர்.

MUST READ