spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு வீச்சு- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு வீச்சு- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

-

- Advertisement -

 

நாங்கள் யார் என்பதை மதுரை மாநாட்டில் நிருபிப்போம் - அதிமுக தொண்டர்கள் உற்சாகம்..
File Photo

சென்னை வேளச்சேரி தனியார் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

ஜியோ பைனான்சியல் பங்குகள் வர்த்தகத்தில் சரிவு!

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீச்சு நடந்துள்ளது என்றால், இந்த ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதன் லட்சணம் இது! இதைவிட இந்த அரசுக்கு வேறென்ன தலைகுனிவு வேண்டும்?

‘ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு’- அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார்? யார்?

இந்த சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதுடன், இந்த மோதலில் ஈடுபட்டோர் மாணவர்கள் தானா அல்லது வேறு ஏதும் பின்னனியில் உள்ளவர்களா என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த விடியா அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ