- Advertisement -
சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் இன்று வெளியாகி உள்ள ”ராங்கி” திரைப்படத்தின் முதல் காட்சியை பார்த்தார் நடிகை திரிஷா.

எம்.சரவணன் இயக்கத்தில் நடிகை த்ரிஷா நடிப்பில் இன்று வெளிவந்துள்ள “ராங்கி” திரைப்படத்தின் சிறப்பு காட்சியை சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் படத்தின் நாயகி த்ரிஷா பார்த்து ரசித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எனது ரசிகர்கள் படத்தை பார்த்துவிட்டு படம் பிடித்தது என சொல்வார்கள் என நம்புகிறேன். அடுத்த படம் குறித்து அடுத்த வருடம் பேசுகிறேன். பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து நடித்த நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களில் நயன்தாரா, ஜோதிகாவிற்கு நீங்கள் போட்டியா என்ற கேள்விக்கு நான் அவர்களை போட்டியாக பார்க்கவில்லை என்றார்.