வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நாயகனாக நடிக்கும் “கஸ்டடி”என்ற திரைப்படம் வரும் 2023 ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
‘மாநாடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் கைகோர்த்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நாளில் படம் வெளியாகிறது.
இதுவரை நாகசைதன்யா நடித்த படத்திலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் கஸ்டடி தான். இப்படத்தில் நாக சைதன்ய காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி செட்டி நடக்கிறார்.
மேலும், அரவிந்த்சாமி வில்லனாகவும், பிரியாமணி, சரத்குமார், சம்பத்ராஜ் உள்ளிட்ட பல முன்னனி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இளையராஜா, யுவன் சங்கர் ராஜா என இரு இசை ஜாம்பவான்கள் இணைந்து இசை அமைக்கின்றனர்.