- Advertisement -
பி.கின்ஸ்லின் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டிருக்கும் திரைப்படம் “டிரைவர் ஜமுனா”. இப்படத்தின் முதல் காட்சியை சென்னை போரூரில் உள்ள தனியார் திரையரங்கில் ரசிகர்களுடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கண்டுகளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், ஹீரோக்களை மையப்படுத்தி வரும் திரைப்படங்களுக்கு மத்தில் பெண்களை மையப்படுத்தி திரைப்படம் வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். நடிகை த்ரிஷாவை நான் போட்டியாளராக கருதவில்லை என்றும், தனக்கு த்ரிஷாவை மிகவும் பிடிக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் த்ரிஷா நடிப்பில் வெளிவந்துள்ள ராங்கி படமும் வெற்றி பெற தான் விரும்புவதாகவும் கருத்து தெரிவித்தார்.