
செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது தார்மீக அடிப்படையில் சரியானது அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், அவர் அமைச்சரவையில் தொடர்வது தொடர்பாக, முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

தனுஷின் ‘தேரே இஷ்க் மெயின்’ படத்தின் கதாநாயகி யார் தெரியுமா?
சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுத் தீர்ப்பு வழங்கியது.
அதில், அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது, அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு எதிரானது மட்டுமல்லாமல், தார்மீக அடிப்படையில் சரியானது அல்ல என்றும் நீதிபதி குறிப்பிட்டனர். செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருப்பதால் எந்த பலனும் இல்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறியதுடன், செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமே என்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தி அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தனர்.
மனோஜ் பாரதிராஜா இயக்கும் ‘மார்கழி திங்கள்’….. டீசர் ரிலீஸ் அப்டேட்!
உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என கேள்வி எழுந்துள்ளது.