- Advertisement -
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள ரத்தம் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி தற்போது ரத்தம் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சி எஸ் அமுதன் இயக்கியுள்ளார். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அமர்நாத்தின் ஒளிப்பதிவிலும் கண்ணன் நாராயணன் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது.

இதில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இதன் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


