spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக பிரமுகர் மீது துப்பாக்கிச்சூடு - 6 பேர் கைது

திமுக பிரமுகர் மீது துப்பாக்கிச்சூடு – 6 பேர் கைது

-

- Advertisement -

திமுக பிரமுகர் மீது துப்பாக்கிச்சூடு – 6 பேர் கைது

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் இளையராஜா மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச்சூடு

விருத்தாசலம் அடுத்த மணவாநல்லூரில் முன்னாள் எம்.எல்.ஏவின் மகனும், திமுக பிரமுகரும், சமூக ஆர்வலருமான இளையராஜா மீது நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த வழக்கில் கடலூர் தனியார் மருத்துவமனைக்கு வந்த ஆடலரசு, புகழேந்தி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக பிரமுகரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் 2 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்த இளையராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

we-r-hiring

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டத்தில் இளையராஜாவின் முதுகில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இளையராஜா தனது வயலுக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது முன்விரோதம் காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

MUST READ