இசை நிகழ்ச்சியில் நடைபெற்ற குளறுபடிகளுக்காக ஏ ஆர் ரகுமான் பொறுப்பேற்க முடியாது என திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்‘ இசை நிகழ்ச்சி சென்னை பனையூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி சில காரணங்களால் தள்ளிச் சென்று செப்டம்பர் 10ம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்ததை விட அதிக அளவில் ரசிகர்கள் குவிந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தினால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும் வெகு நேரமாக போக்குவரத்து நெரிசலால் சிரமத்திற்கு ஆளாகினர். கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கு மேலாக இந்த போக்குவரத்து நெரிசல் நிலவியது. இந்த பிரச்சனை குறித்து பேசிய ஏ ஆர் ரகுமான், பொதுமக்களுக்கு ஏற்பட்ட இந்த இடையூறுக்கு தான் முழு பொறுப்பு ஏற்பதாக தெரிவித்திருந்தார்.
மேலும் ஏ ஆர் ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் இந்த விவகாரம் தொடர்பாக பலரும் அரசியல் செய்வதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் கார்த்தி நடிகை குஷ்பூ உள்ளிட்டோர் இந்த குளறுபடிகளுக்கு ஏ ஆர் ரகுமான் பொறுப்பேற்க முடியாது என தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
‘இசை நிகழ்ச்சி ஏற்பட்ட குளறுபடிகளுக்கு அவர் பொறுப்பேற்க முடியாது’….. ஏ ஆர் ரகுமானுக்கு குவியும் ஆதரவு!
-
- Advertisement -


