spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசந்திரபாபு நாயுடுவை விசாரிக்க செப்.18 வரை இடைக்காலத் தடை!

சந்திரபாபு நாயுடுவை விசாரிக்க செப்.18 வரை இடைக்காலத் தடை!

-

- Advertisement -

 

தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய தெலுங்கு தேசம் கட்சி!
File Photo

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுவை விசாரிக்க வரும் செப்டம்பர் 18- ஆம் தேதி வரை இடைக்காலத் தடையை விதித்தது உயர்நீதிமன்றம்.

we-r-hiring

உரிமைத் தொகை- ஏன் விண்ணப்பம் நிராகரிப்பு?

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, ராஜமுந்திரி மத்திய சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தனது பெயரை போலியாகச் சேர்த்துள்ளனர்; விதிகள் மீறப்பட்டுள்ளது என சந்திரபாபு நாயுடு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 1ரூபாய் சோதனை குறுஞ்செய்தி வெற்றி

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சந்திரபாபு நாயுடுவை விசாரிக்க ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு வரும் செப் .18- ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்ட ஆந்திர மாநில உயர்நீதிமன்றம், சந்திரபாபு நாயுடு தொடர்ந்து நீதிமன்றக் காவலில் இருக்கலாம் எனக் கூறி, வழக்கு விசாரணையை வரும் செப்.19- ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

MUST READ