spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்- மு.க.ஸ்டாலின் பெருமிதம்

கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்- மு.க.ஸ்டாலின் பெருமிதம்

-

- Advertisement -

கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்- மு.க.ஸ்டாலின் பெருமிதம்

திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பெண் அர்ச்சகர்கள்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் திட்டத்தின்படி, தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர், மதுரை, ஸ்ரீரங்கம், சென்னை ஆகிய இடங்களில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு ஆண், பெண் இருபாலரும் பயிற்சி பெறலாம். ஓராண்டு பயிற்சியில், பூஜைகள், ஆகம விதிகள் என அனைத்தும் கற்றுக்கொடுக்கப்படும். அதன்படி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் திட்டத்தின்படி, தமிழ்நாடு அரசின் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்த 3 பெண்கள் அர்ச்சகர்கர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

we-r-hiring

இதற்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.

ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது #திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்…” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ