spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஉண்மையில் நடந்ததை படமாக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்...... 'ஆர் யூ ஓகே பேபி' டிரைலர் வெளியீடு!

உண்மையில் நடந்ததை படமாக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்…… ‘ஆர் யூ ஓகே பேபி’ டிரைலர் வெளியீடு!

-

- Advertisement -

ஆர் யூ ஓகே பேபி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

லட்சுமி ராமகிருஷ்ணன் அரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு இயக்கியுள்ள திரைப்படம் ஆர் யூ ஓகே பேபி.

we-r-hiring

இந்த படத்தில் சமுத்திரக்கனி, அபிராமி இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் மிஸ்கின், ஆடுகளம் நரேன், வினோதினி, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இளையராஜா இதற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த ட்ரெய்லரின் மூலம் லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் அரங்கேறிய உண்மை சம்பவங்களை மையமாக வைத்து ஆர் யூ ஓகே பேபி திரைப்படம் உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது. ஒரு குழந்தைக்காக இரு தாய்மார்கள் உரிமை கோரும் கதையை பின்னணியாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. மேலும் இப்படம் வருகின்ற செப்டம்பர் 22ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ