
கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் அறிகுறி உறுதிச் செய்யப்பட்டதால் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு ஆக உயர்ந்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 6ஆவது முறையாக நீட்டிப்பு!
கேரள மாநிலத்தில் பரவி வரும் நிபா வைரஸுக்கு இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆறு ஆக அதிகரித்துள்ளது. இதில் இரண்டு பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், நான்கு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிதாக நிபா வைரஸ் நோய், உறுதிச் செய்யப்பட்ட நபர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் 30- ஆம் தேதி உயிரிழந்த முதல் நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்களும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவேம் நோய் பரவலைத் தடுக்கும் வகையில் நோய் அறிகுறிகள் இல்லாவிட்டாலும், தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள முடிவுச் செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 1,080 பேர் தொடர்பில் இருந்திருப்பது தெரிய வந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். நிபா வைரஸ் தொற்றைத் தடுக்க கோழிக்கோட்டில் இயங்கும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும், வரும் செப்டம்பர் 24- ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சனாதன தர்மம்- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!
இதற்கிடையே, அவசியமின்றி கேரளாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு கர்நாடகா மக்களுக்கு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.