spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஇலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம்களில் புதிய வீடுகள் -முதலமைச்சர் நெகிழ்ச்சி

இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம்களில் புதிய வீடுகள் -முதலமைச்சர் நெகிழ்ச்சி

-

- Advertisement -

கடல் கடந்து வந்த நம் தமிழ்ச் சொந்தங்களின் வாழ்வாதாரம் மேம்பட கலைஞரின் நூற்றாண்டில் 19 இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள 1,591 வீடுகளைத் திறந்து வைத்துள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.

இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம்களில் புதிய வீடுகள் -முதலமைச்சர் நெகிழ்ச்சி

இலங்கை தமிழர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன் மூலம் திமுக அரசின் சார்பாக வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.இன்று தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி 13 மாவட்டங்களில் 1,591 வீடுகளை மு.க ஸ்டாலின்  அவர்கள் திறந்து வைத்துள்ளார்.

we-r-hiring

இத்திட்டத்தினை குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியதாவது,” அகதி முகாம்கள்’ அல்ல, இனிஅவை ‘இலங்கைத்தமிழர்மறுவாழ்வுமுகாம்கள்’ எனஆட்சிக்குவந்ததுமேபெயர்மாற்றி,கடல் கடந்து வந்த நம் தமிழ்ச் சொந்தங்களின் வாழ்வாதாரம் மேம்பட கலைஞரின் நூற்றாண்டில், தந்தைபெரியாரின் பிறந்தநாளான இன்று 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள 1,591 வீடுகளைத் திறந்து வைத்து, அவர்களுடன் நேரிலும் காணொலிக் காட்சியிலும் உரையாடி மகிழ்ந்தேன். புதிய இல்லங்களுக்குள் நுழைந்ததும் அவர்கள் வெளிப்படுத்திய மகிழ்ச்சி தந்த மனநிறைவுடன் நடைபெறும் முப்பெரும் விழாவில் மாலை கலந்து கொள்வதாக கூறினார்.

இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம்களில் புதிய வீடுகள் -முதலமைச்சர் நெகிழ்ச்சி

இதுகுறித்து இலங்கை தமிழர்கள் கூறியதாவது,இலங்கை தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சியான இன்னல்களை முதல்வர் அவர்கள் வழங்கியுள்ளதாகவும் இது போல நிறைய திட்டங்கள் செயல்படுத்துவதன் மூலம் இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு கிடைத்துள்ளதாகவும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினர்.

 

MUST READ