நாக சைதன்யா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கஸ்டடி. வெங்கட் பிரபு இயக்கிய இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.
அதைத் தொடர்ந்து நாக சைதன்யா தனது 23வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை கார்த்திகேயா 1, கார்த்திகேயா 2 வெற்றி படங்களை இயக்கிய சந்தூ மொண்டேட்டி இயக்குகிறார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இதில் நாக சைதன்யா மீனவனாக நடிக்க இருக்கிறார். உண்மை சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் உருவாக உள்ளது. சமீபத்தில் NC 23 படத்தில் பிரபல நடிகை இணைய இருப்பதாக வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதில் அந்த நடிகையின் முகம் மறைத்து காட்டப்பட்டது. அந்த நடிகை சாய்பல்லவி ஆக இருக்கலாம் என ரசிகர்கள் கூறிவந்த நிலையில் தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதன்படி நடிகை சாய் பல்லவி தனது ட்விட்டர் பக்கத்தில், ” கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் சந்தூ மொண்டேட்டி கூட்டணியில் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நாக சைதன்யாவுடன் மீண்டும் ஒரு ஸ்பெஷல் படம் நடிப்பதில் மகிழ்ச்சி. NC23 படத்தில் இணைந்துள்ளதால் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்” என்ற பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் சாய் பல்லவி இந்த படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
So happy to be part of this loving team❤️Thank you for the warm welcome @GeethaArts #BunnyVas @chandoomondeti @chay_akkineni Garu, I’m glad that we’re doing another special film together☺️
Naa priyamaina telugu prekshakulu, I missed you all so much!! Ippudu #NC23 dwara… pic.twitter.com/B4AicFhwKb
— Sai Pallavi (@Sai_Pallavi92) September 20, 2023
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான லவ் ஸ்டோரி திரைப்படத்தில் நாக சைதன்யாவும் சாய் பல்லவியும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
