spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎதிர்க்கட்சி துணைத்தலைவராகிறார் ஆர்.பி.உதயகுமார்?- செங்கோட்டையன்

எதிர்க்கட்சி துணைத்தலைவராகிறார் ஆர்.பி.உதயகுமார்?- செங்கோட்டையன்

-

- Advertisement -

எதிர்க்கட்சி துணைத்தலைவராகிறார் ஆர்.பி.உதயகுமார்?- செங்கோட்டையன்

எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி தொடர்பாக சபாநாயகர் பரிசீலிப்பதாக கூறியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையன்
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகரை அதிமுகவினர் சந்தித்து பேசினர். அப்போது எதிர்க்கட்சி துணைத்தலைவர் பொறுப்பை ஆர்.பி.உதயகுமாருக்கு அளிக்க கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக அதிமுக துணை கொறடா ரவி, முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, செங்கோட்டையன் உள்ளிட்டோர் சபாநாயகரிடம் மனு அளித்தனர்.

சபநாயகருடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஏற்றுள்ளது. உச்சநீதிமன்றம் அதை உறுதி செய்துள்ளது. அதனடிப்படையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு ஒதுக்க கோரியுள்ளோம். எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சபாநாயகரிடம் 3-வது முறையாக கடிதம் அளித்துள்ளோம். கடிதம் குறித்து பரிசீலிப்பதாக சபாநாயகர் அப்பாவு கூறினார். சபாநாயக மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. திமுக – காங்கிரசுடன் கூட்டணி கட்சியில் இருந்தும் கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் பெற்றுத் தர முடியவில்லை” என்றார்.

we-r-hiring

 

MUST READ