Homeசெய்திகள்தமிழ்நாடு"சோதனைகளைக் கண்டு அஞ்சும் கூட்டம் நாங்கள் அல்ல"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

“சோதனைகளைக் கண்டு அஞ்சும் கூட்டம் நாங்கள் அல்ல”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

-

- Advertisement -

 

jayakumar
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், “பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்பதில் எந்த மாற்றமும் இல்லை; செப்டம்பர் 18- ஆம் தேதி எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை எனும் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.

நான்கு மாதங்களுக்கு பிறகு மொபைல் இணையச் சேவையைப் பெற்ற மக்கள்!

அ.தி.மு.க. நிர்வாகிகள் டெல்லி சென்று வந்த நிலையில் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. சோதனைகளை எல்லாம் கண்டு அஞ்சும் கூட்டம் நாங்கள் இல்லை. நாளை நடக்கும் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காகவே மத்திய அமைச்சரை அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.

மத்திய அமைச்சரிடம் கட்சி சார்ந்து எதுவும் பேசவில்லை. கடந்த 1972- ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.க. பல சோதனைகளைத் தாண்டி வந்த இயக்கம். பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் அ.தி.மு.க.வை இருமுறை ஜெயலலிதா வெற்றி பெற வைத்தார்” எனத் தெரிவித்தார்.

“புத்தகங்களைப் படிக்க குழந்தைகளைத் தூண்ட வேண்டும்”- பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை!

அண்ணா உள்ளிட்டத் தலைவர்களை அண்ணாமலை விமர்சித்தது தொடர்பாக அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ