Homeசெய்திகள்இந்தியாநான்கு மாதங்களுக்கு பிறகு மொபைல் இணையச் சேவையைப் பெற்ற மக்கள்!

நான்கு மாதங்களுக்கு பிறகு மொபைல் இணையச் சேவையைப் பெற்ற மக்கள்!

-

- Advertisement -

 

பழங்குடி பெண்களுக்கு கொடூரம் இழைத்த 4 பேருக்கும் காவல் நீட்டிப்பு!
File Photo

வன்முறைகள் அரங்கேறிய மணிப்பூரில் நான்கு மாதங்களுக்கு பிறகு மொபைல் இணையச் சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு..

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் உள்நாட்டு இனக்குழுக்களுக்கு இடையே வெடித்த வன்முறைகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. வன்முறைகளைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கத்தில், கடந்த மே மாதம் 3- ஆம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து இணையச் சேவைகளும் முடக்கப்பட்டன.

தொடர்ந்து, மாநிலத்தில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு அந்த தடை நீட்டிக்கப்பட்டு வந்தது. கடந்த ஜூலை மாதம் 25- ஆம் தேதி மாநிலத்தில் பிராட் பேண்ட் சேவை மீண்டும் வழங்கப்பட்ட நிலையில், நான்கு மாதங்களுக்கு பிறகு மாநிலத்தில் மொபைல் இணையச் சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டிருப்பதாக மாநில முதலமைச்சர் பிரேன் சிங் அறிவித்துள்ளார்.

“தென்மேற்கு பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

கடந்த மாதம் இது தொடர்பான வழக்கை விசாரித்த மணிப்பூர் மாநில உயர்நீதிமன்றம், பொதுமக்களுக்கு மொபைல் இணையச் சேவைகளை படிப்படியாக வழங்கும் நடைமுறைகளை வகுக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், இணையச் சேவை வழங்கப்பட்டுள்ளது.

MUST READ