spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅடே அப்பா! விஜய்க்கு இவ்வளவு சம்பளமா?

அடே அப்பா! விஜய்க்கு இவ்வளவு சம்பளமா?

-

- Advertisement -

ரசிகர்களால் இளைய தளபதி என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய், இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் ஷோபனா தம்பதிகளின் வாரிசு என்ற அடைமொழியோடு நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் திரை உலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார்.

we-r-hiring

தன் உழைப்பாலும், நடிப்பு திறனாலும் திரை உலகில் முன்னணி கதாநாயகன் நிலைக்கு இன்று உயர்ந்து உள்ளார். இவருக்கு அதிக வசுலை வாரி குவித்து மார்க்கெட் ரீதியாக ஒரு வசூல் மன்னன் என்ற பெயரை தேடித் தந்தது கில்லி திரைப்படம் தான்.

2004 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் தரணி இயக்கத்தில் ஏ. எம். ரத்தினம் தயாரிப்பில் ஒக்கடு என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ஆக தமிழில் வெளிவந்தது.

5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் 50 கோடி ரூபாய் வரை வசூலை வாரிக்குவித்தது. இப்படத்திற்கு நடிகர் விஜய்க்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூபாய் 4 கோடி. ஆனால் இப்பொழுது பொங்கலுக்கு வெளிவர இருக்கும் வாரிசு படத்திற்கு விஜய்க்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ”ரூபாய் 120 கோடி”.

நடிகர் விஜய் வளர்ந்து வந்து உச்சத்தை தொட்டது போல அவரின் சம்பளமும் பல மடங்கு உயர்ந்துள்ளது. ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கும் வாரிசு திரைப்படம் கில்லி திரைப்படத்தை போல பல மடங்கு வசுலை வாரி தருமா? அல்லது பீட்ஸ் படம் போல் சீக்கிரம் போய்விடுமா?

பொங்கல் வரை பொறுத்திருந்து பார்ப்போம்!….

MUST READ