
உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்கள் மாட்டிறைச்சி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

“நதிகளை இணைப்பதே தீர்வைத் தரும்”- ஆளுநரைச் சந்தித்த பின் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 05- ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க வெளிநாட்டு அணியின் கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவுக்கு வருகைத் தந்துள்ளனர்.
இவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும், ஐ.சி.சி. செய்திருக்கிறது. இந்த நிலையில், உலகக்கோப்பை பங்கேற்கும் கிரிக்கெட் அணிகளுக்கு மாட்டிறைச்சி மறுக்கப்பட்டிருக்கிறது.
தீவிரமடையும் ஆசிரியர்கள் போராட்டம்- 60 பேர் சுருண்டு விழுந்ததால் பரபரப்பு
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டயட் பிளானிங் படி மாட்டிறைச்சி எடுக்க வேண்டும் என விதி வகுக்கப்பட்டிருக்கும் நிலையில், மாட்டிறைச்சி மறுக்கப்பட்டிருப்பது பேசும் பொருளாகியுள்ளது. அதேபோல், கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டல் மெனுவில் மாட்டிறைச்சி இடம் பெறவில்லை.
அதேசமயம், மாட்டிறைச்சிக்கு பதில் வேறு சத்தான உணவை வீரர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கூறுகின்றனர்.


