கப்பலோட்டிய தமிழன், ராஜராஜசோழன் போன்றவர்களின் மகத்துவத்தை சினிமா தான் அடையாளம் காட்டியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்.

“கல்லறை” படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் இரா. முத்தரசன் அவர்கள் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், கல்லறை என்பது விதைக்கப்பட வேண்டிய இடம். நிரந்தரமானது, சொந்தமானது என்று தலைப்பு பற்றி கூறினார்.
கடைசியாக எல்லோருக்கும் தெரியட்டும், உலகம் பார்க்கட்டும், நாம் எதையும் கொண்டு போகவில்லை என்று கையை வெளியே கையை நீட்டிக்கொண்டே கொண்டு செல்வார்கள் என்று சொல்வார்கள். எனவே இந்த தலைப்பை பற்றி பயப்பட வேண்டாம் என்று தலைப்புக்கான விளக்கத்தை கூறினார்.
அடுத்து சினிமா உலகம் மகத்தான சாதனை செய்து கொண்டிருக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மனை யாருக்கு தெரியும். வீரபாண்டிய கட்டபொம்மன் படம் வந்த பிறகுதான் தெரிந்தது. அதனுடைய தேசபக்தி, விடுதலைப் போராட்டம் போன்ற வரலாற்றை அறிய முடிந்தது. அது மட்டுமல்ல கப்பலோட்டிய தமிழன், ராஜராஜசோழன் போன்ற மகத்தான படங்கள், மகத்தான சாதனையையும் இந்த படங்கள் தான் தெரிய வைத்தது. கப்பலோட்டிய தமிழன் ராஜராஜசோழன் போன்ற படங்களின் மகத்துவத்தையும் இந்த மகத்தான சினிமா தான் நமக்கு அடையாளம் காட்டியது. எனவே புதியவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
கல்லறை படத்தின் படக் குழுவினர் மற்றும் விநியோகஸ்தர்கள், சங்கத் தலைவர் கே. ராஜன் என அனைவரையும் வாழ்த்தி பேசினார். விநியோகஸ்தர் சங்கம் சார்பாக சமீபத்தில் என்னை அழைத்தார்கள். என்னை தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் திரு. முரளி அவர்களையும் அதன் செயற்குழு உறுப்பினர் விஜய முரளி அவர்களையும் நான் உட்பட மரியாதைக்குரிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எங்களை அழைத்து கலந்துரையாடினார்.
தமிழ் திரைப்படங்கள் மற்றும் சினிமா முன்னேற்றத்திற்கு என்னென்ன வழிகள் இருக்கிறது என்று எங்களிடம் கலந்துரையாடினார். சிறு முதலீட்டு படங்களுக்கு எப்போது வெளியிடலாம் என்று நாங்களும் ஆலோசனை கூறினோம். கண்டிப்பாக சிறுபட முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு நிச்சயமாக நாம் நல்ல வழியை செய்வோம் என்று தமிழ் திரை உலக முன்னேற்றத்திற்கு கண்டிப்பா நம்ம பாடுபடுவோம் என்று எங்களிடம் உறுதி கூறினார் என்றார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம், மனமாற வரவேற்கிறோம், வாழ்த்துக்கள் என்றார். அடுத்ததாக இந்த விழாவில் எனக்கு பரிசு வழங்கியது புத்தகம். எனக்கு மட்டுமல்ல இந்த மேடையில் அமர்ந்த அனைவருக்கும் புத்தகத்தை வழங்கினார்கள். ஆனால் எனக்கு மட்டும் நான் பெரிதும் விரும்பிய தலைவர் எழுதிய புத்தகத்தை எனக்கு வழங்கினார். காந்திக்கு பிறகு காமராஜர் என்று கலைஞர் அவர்கள் தான் காமராஜரை அழகு பார்த்தார். அந்த கலைஞர் எழுதிய புத்தகத்தை எனக்கு பரிசாக வழங்கினார்கள். எனது மிகப் பெரிய பெருமைப்பட வேண்டிய விஷயமாக இருக்கிறது என்று கூறினார். சிக்கனமாக படம் எடுத்திருக்கிறார்கள் என்று படம் தயாரிப்பாளர் ரதி ஜவஹர் அவர்களையும் வெகுவாக பாராட்டினார்.