
சென்னையை அடுத்துள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்றும் (அக்.03) திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படத் தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்!
வழக்கமாக, செவ்வாய்க்கிழமை அன்று பூங்காவுக்கு வார விடுமுறை அளிக்கப்படும். ஆனால் தொடர் விடுமுறை மற்றும் பள்ளிகளுக்கும் விடுமுறை காலம் என்பதால், பார்வையாளர்களுக்காக உயிரியல் பூங்கா இன்று (அக்.03) திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருதலை காதலால் இளம்பெண்ணை கொலைச் செய்த சிறுவன்!
முன்னதாக, கடந்த சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமைகளில் தொடர் விடுமுறை என்பதால் பூங்காவில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. குடும்பத்துடன் வந்திருந்த மக்கள், பூங்காவில் இருந்த வெள்ளை புலி, சிங்கம், யானை, மனித குரங்கு போன்ற விலங்கினங்களையும், இயற்கையையும் கண்டுகளித்தனர்.
