Homeசெய்திகள்இந்தியா"சிறுதானியங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு"- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

“சிறுதானியங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

-

- Advertisement -

 

"சிறுதானியங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு"- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
Photo: PIB

டெல்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் இன்று (அக்.07) காலை 10.00 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 52வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், ஜி.எஸ்.டி. துறை அதிகாரிகள், மத்திய நிதித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

“இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்”- இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்!

இதில், பல்வேறு பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரியைக் குறைப்பது குறித்தும், சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை உயர்த்துவது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ஜி.எஸ்.டி. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “சிறுதானியங்களை ஊக்குவிக்கும் வகையில் அதன் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது. சிறுதானியங்களால் தயாரிக்கும் மாவுகளை லூசில் விற்பனைச் செய்தால் அதன் மீது ஜி.எஸ்.டி. வரி விதிப்பு இல்லை. லேபிள் ஒட்டி பேக்கிங் மூலம் சிறுதானிய மாவு விற்பனைச் செய்யப்பட்டால் 5% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும்.

ஆசிய விளையாட்டுப் போட்டி- இந்தியா சாதனை!

கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் மொலாசஸ் மீதான ஜி.எஸ்.டி. வரி 28% – லிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. தூய்மையான ஆல்கஹால் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களிடமே விடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

ஆல்கஹாலுக்கு ஜி.எஸ்.டி., வாட் விதிக்கும் முடிவுக்கு தமிழகம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ