spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஆசிய விளையாட்டுப் போட்டி- இந்தியா சாதனை!

ஆசிய விளையாட்டுப் போட்டி- இந்தியா சாதனை!

-

- Advertisement -

 

ஆசிய விளையாட்டுப் போட்டி- இந்தியா சாதனை!
File Photo

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இந்தியா ஒட்டுமொத்தமாக 100- க்கும் அதிகமான பதக்கங்களைக் குவித்து, ஆசிய விளையாட்டில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

we-r-hiring

“இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்”- இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்!

ஆடவர் கபடி போட்டியில், இறுதிப் போட்டியில் இந்தியா- ஈரான் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இரு அணிகளும் சம பலத்தில் மோதியதால் விறுவிறுப்பு தொற்றிக் கொண்டது. முடிவில், இந்திய அணி 33- 29 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா ஆசிய சாம்பியன் பட்டம் வென்றது.

இதேபோல், மகளிர் பிரிவில் சீன- தைபே அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கத்தை வசப்படுத்தியது. அதேபோல், ஆடவர் கிரிக்கெட் போட்டியில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.

வில்வித்தை ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், இந்தியாவைச் சேர்ந்த அபிஷேக் வர்மா, ஓஜாஸ் பிரவீன் ஆகியோர் மோதினர். இதில் ஓஜாஸ் தங்கமும், அபிஷேக் வெள்ளியும் வென்று இந்தியாவுக்கு பெருமைச் சேர்த்தனர்.

சிக்கிம் வெள்ளப்பெருக்கு – பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு

அதேபோல், வில்வித்தை மகளிர் ஒற்றையர் பிரிவில் தென்கொரிய வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் ஜோதி சுரேகா தங்க பதக்கம் வென்றார். தொடர் பதக்க வேட்டைகள் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 26 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறது.

MUST READ