சிக்கிம் வெள்ளப்பெருக்கு – பலி எண்ணிக்கை 77 ஆக உயர்வு
சிக்கிம் தீஸ்தா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
மேக வெடிப்பு காரணமாக கொட்டித்தீர்த்த கனமழையால் சிக்கிம் மாநிலம் தீஸ்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுங்கதாங்க் அணையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதும் தீஸ்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் அடித்துவரப்பட்ட சேறு மற்றும் குப்பைகளில் இருந்து ராணுவம் மற்றும் என்டிஆர்எஃப் குழுக்கள், ஏழு ராணுவ வீரர்கள் உட்பட 26 உடல்களை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 15 ராணுவ வீரர்கள் உட்பட 142 பேரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் கூறுகையில், இமயமலை மாநிலம் வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான இழப்புகளை சந்தித்துள்ளது. சிக்கிம் அரசாங்கத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்து தெருவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2023-24 ஆம் ஆண்டிற்கான மாநில பேரிடர் நிவாரண நிதியின் மத்திய பங்கான 44.80 கோடி ரூபாயை முன்கூட்டியே விடுவிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஒப்புதல் அளித்துள்ளார்” என்றார்.