Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக- கேரளா எல்லையில் பாஜகவினர் திடீர் மறியல்

தமிழக- கேரளா எல்லையில் பாஜகவினர் திடீர் மறியல்

-

- Advertisement -

தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான கோட்டைவாசல் பகுதியில் பாஜகவினர் திடீர் சாலை மறியல் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. இது தொடர்பாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

annamalai

we-r-hiring

தென்காசி மாவட்டத்திலிருந்து கனிம வளங்களை அளவுக்கு அதிகமாக கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜகவினர் சுமார் 15 பேர் இன்று காலை தமிழக எல்லை யான கோட்டைவாசல் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர் பாஜக மாவட்ட நிர்வாகிகளுக்கு இது குறித்து போலீசார் தகவல் தெரிவித்த போது மறியல் செய்தவர்கள் யாரும் தங்களிடம் அனுமதி எதுவும் பெறவில்லை. நீங்கள் உரிய நடவடிக்கை எடுங்கள் என்று மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்து விட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டதாக பத்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

பாஜகவினரின் இந்த சாலை மறியல் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு கூட தெரியாமல் திடீரென நடத்தப்பட்டதால் கட்சி பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

MUST READ