spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'லியோ' திரைப்படம்- செவ்வாய்க்கிழமை விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி அறிவிப்பு!

‘லியோ’ திரைப்படம்- செவ்வாய்க்கிழமை விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி அறிவிப்பு!

-

- Advertisement -

 

இணையவழி சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள்- பதில் அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம்!
File Photo

‘லியோ’ படத்தை அது வெளியாகும் தேதியில் சிறப்பு காட்சியாக அதிகாலை 04.00 மணிக்கு திரையிட அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி, படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

we-r-hiring

தொழிற்சாலை ஊழியர்களுக்கு சாலை விழிப்புணர்வு-ஆய்வாளர் ஜெயக்குமார்

இந்த மனு மீதான விசாரணையின் போது, சிறப்பு காட்சிகள் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுவை செவ்வாய்க்கிழமை விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

வரும் அக்டோபர் 19- ஆம் தேதி வெளியாக உள்ள ‘லியோ’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை காலை 09.00 மணிக்கு வெளியிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இம்மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-இன்ஃபண்ட் ஜீசஸ் நர்சரி பிரைமரி பள்ளி இணைந்து நடத்திய-வளரும் விஞ்ஞானிகளின் அறிவியல் கண்காட்சி

இந்த நிலையில், அதிகாலை 04.00 மணிக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதிக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் ஒரு காட்சி மட்டும் கூடுதலாக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கி உத்தரவிடுமாறு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

MUST READ