
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னையின் திட்டப்பணிகள் குறித்த கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் உள்ள இன்று (அக்.18) காலை 10.00 மணிக்கு மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

விஜய்யின் லேட்டஸ்ட் வீடியோ வைரல்
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா மற்றும் நான்கு மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அரசின் திட்டங்கள் குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொது பயன்பாட்டு மின் கட்டணம் ரூபாய் 8- லிருந்து ரூபாய் 5.50 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 10 வீடுகளுக்கு குறைவாக, 3 மாடிகளுக்கு குறைவாக உள்ள வீடுகளின் பொது பயன்பாட்டு மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. லிஃப்ட் இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பொது பயன்பாட்டு மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
கால்பந்தாட்டத்தில் பதக்கம் வென்ற குட்டி தல… கொண்டாடும் ரசிகர்கள்…
சென்னையை அடுத்த நாவலூர் சுங்கச் சாவடியில் நாளை (அக்.19) முதல் சுங்கக்கட்டணம் வசூலிப்பது ரத்துச் செய்யப்பட்டுள்ளது. தென்சென்னை பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று நாவலூர் சுங்கக்கட்டணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள், பத்திரிகைகள் படித்து, ஊடகங்களைப் பார்த்து மாவட்ட பிரச்சனைகளை தெரிந்துக் கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.