Homeசெய்திகள்தமிழ்நாடு'கப்பலில் பழுது நீக்கும் போது கேஸ் பைப் வெடித்து விபத்து'- ஒருவர் உயிரிழப்பு!

‘கப்பலில் பழுது நீக்கும் போது கேஸ் பைப் வெடித்து விபத்து’- ஒருவர் உயிரிழப்பு!

-

- Advertisement -

 

'கப்பலில் பழுது நீக்கும் போது கேஸ் பைப் வெடித்து விபத்து'- ஒருவர் உயிரிழப்பு!
File Photo

சென்னை துறைமுகத்தில் கப்பலில் பழுதுநீக்கும் பணியின் போது, கேஸ் பைப் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில், மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் குடியிருப்புவாசிகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்

ஒடிஷா மாநிலத்தில் இருந்து கடந்த அக்டோபர் 31- ஆம் தேதி எம்.டி.பேட்ரியான் என்ற கப்பல் பழுது நீக்கும் பணிக்காக சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. சென்னை துறைமுக வளாகத்தில் கோஸ்டல் பர்த் பிளேஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்த ஒரு போல்ட்டை கேஸ் கட்டர் மூலம் அகற்றும் போது, அருகில் இருந்த கேஸ் பை லைன் மீது பட்டு வெடித்திருக்கிறது.

‘மகளிர் உரிமைத்தொகை’- நாட்டிற்கே முன்மாதிரியான திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

இதில், அந்த பணியில் ஈடுபட்டிருந்த தண்டையார்பேட்டையைச் சேர்ந்த தங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த மூன்று பேர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை துறைமுக காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ