தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் H. வினோத், நடிகர் அஜித்குமார் கூட்டணியில் ”நேர்கொண்ட பார்வை”, ”வலிமை” ஆகிய திரைப்படங்கள் வசூல் சாதனை படைத்தது.
தற்போது, இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து உருவாக்கி உள்ள ”துணிவு” திரைப்படம் வரும் 11ம் தேதி பொங்கலையொட்டி திரைக்கு வருகிறது.

அதில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பிரேம்குமார், ஜி. எம். சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.
”உதயநிதி ஸ்டாலின்” ”ரெட் ஜெய்ன்ட் மூவிஸ்” சார்பில் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார்.
இப்படத்தில் இடம் பெற்ற ”ஜில்லா ஜில்லா”, ”காசேதான் கடவுளடா” மற்றும் ”கேங்ஸ்டர்” ஆகிய பாடல்கள் சமீபத்தில் சமூக வலையதலத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்திற்கு சென்சார் போர்டில் U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.