spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇறுதிப் போட்டியில் உலகக் கோப்பையை வெல்லப்போவது இந்தியா தான்..... நடிகர் ரஜினிகாந்த் உறுதி!

இறுதிப் போட்டியில் உலகக் கோப்பையை வெல்லப்போவது இந்தியா தான்….. நடிகர் ரஜினிகாந்த் உறுதி!

-

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு டிஜே ஞானவேல் இயக்கி வரும் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் புதன்கிழமை மும்பையில் இருக்கும் வான்கடே விளையாட்டு மைதானத்தில் இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையில் உலகக் கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி சுற்று நடைபெற்றது. அதில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இதனை ரஜினி தனது குடும்பத்தாருடன் மும்பை சென்று கண்டுகளித்தார். அதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, ” நூறு சதவிகிதம் வெற்றி நமதே” என்று உலகக்கோப்பையை வெல்லப்போவது இந்திய அணி தான் என்று உறுதியாக பேசியுள்ளார். ரஜினியின் இந்த வார்த்தை ரசிகர்களுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இறுதிப் போட்டியில் உலக கோப்பையை வெல்லப்போவது இந்தியா தான்..... நடிகர் ரஜினிகாந்த் உறுதி! மேலும் உலகக்கோப்பை இறுதி சுற்றானது வரும் ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ