- Advertisement -
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். பொதுவாக இப்படியான நடிகர்களின் வாரிசுகளும் சினிமாவில் நடிகர்களாகவே களமிறங்குவர். ஆனால் இதற்கு மாறாக விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக களமிறங்கியுள்ளார்.
இதற்கு முன்னர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், ஜேசனை கதாநாயகனாக வைத்து ஒரு கதை கூறியுள்ளார். அந்தக் கதை நன்றாக இருக்கிறது, அதில் நடிக்கலாம் என்று விஜயும் பரிந்துரை செய்துள்ளார். ஆனால் ஜேசன், தான் இயக்குனர் தான் ஆவேன் என்று உறுதியாக கூறிவிட்டாராம். இதனிடையே ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது




