spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரம்மாண்டமாக உருவாகும் காந்தாரா 2... அசத்தலான அப்டேட்!

பிரம்மாண்டமாக உருவாகும் காந்தாரா 2… அசத்தலான அப்டேட்!

-

- Advertisement -

அதல பாதாளத்தில் இருந்த கன்னட சினிமாவை இந்திய திரை உலகமே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் தான் காந்தாரா. சுமார் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்து இமாலய சாதனை படைத்தது. மலைவாழ் மக்களிடமிருந்து தன் முன்னோர் கொடையாக அளித்த கிராமத்தை வஞ்சகமாக கைப்பற்ற நினைக்கும் பண்ணையார், அதனை எதிர்த்து போராடும் கிராம மக்கள், அந்த மக்களுக்கு துணையாக நிற்கும் அவர்களுடைய தெய்வ நம்பிக்கை என ஒரு சாதாரண கதையம்சம் கொண்ட படமானது, படமாக்கப்பட்ட விதம் மற்றும் பின்னணி இசை என தொழில் நுட்ப காரணங்களால் வேறு ஒரு பரிமாணத்தில் பார்வையாளர்களை சென்றடைந்தது. கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் ரிஷப் ஷெட்டியின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயினர்.பிரம்மாண்டமாக உருவாகும் காந்தாரா 2... அசத்தலான அப்டேட்! அந்த அளவுக்கு எதார்த்தமாகவும் நல்லதொரு சினிமாவாகவும் ரசிகர்களுக்கு விருந்தாக படைத்தது காந்தாரா. இப்படத்தின் நாயகனான ரிஷப் ஷெட்டியே படத்தை இயக்கவும் செய்திருந்தார்.

காந்தாரா படத்திற்கு கிடைத்த வரவேற்பினால் காந்தாரா 2 படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படம் காந்தாரா நடைபெறும் காலகட்டத்திற்கு முன்னதாக நடைபெறும் கதையாக உருவாகும் என ஏற்கனவே படக் குழுவினர் அறிவித்திருந்தனர்.பிரம்மாண்டமாக உருவாகும் காந்தாரா 2... அசத்தலான அப்டேட்!

we-r-hiring

அதன்படி இந்த படம் கிபி 301 – 400 காலகட்டத்தில் நடைபெறுவது போன்று உருவாக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. காந்தாரா முதல் பாகத்தின் ப்ரீக்குவலாகவும் 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகப் போவதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. அதே சமயம் ரிஷப் ஷெட்டி, நிறைய ஆராய்ச்சிகளுக்கு பிறகு காந்தாரா 2 படத்தின் ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளை முடித்துவிட்டாராம். எனவே இந்த படத்தின் பூஜை வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ