Homeசெய்திகள்தமிழ்நாடுஎதிர்க்கட்சி போல ஆளுநர் நடந்திருப்பது உரிமை மீறல்- கே.பாலகிருஷ்ணன்

எதிர்க்கட்சி போல ஆளுநர் நடந்திருப்பது உரிமை மீறல்- கே.பாலகிருஷ்ணன்

-

- Advertisement -

சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு தயாரித்த உரையில் ’திராவிட மாடல்’ என்ற வார்த்தையை படிக்கவில்லை.

அண்ணாமலை திருந்தவில்லை என்றால் அவர் சார்ந்த கட்சியாவது அவரை திருத்துமா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளார் கே.பாலகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார்.

we-r-hiring

அதேபோல் ‘அமைதி பூங்கா தமிழ்நாடு’, சமூகநீதி, சுயமரியாதை, திராவிட மாடல் என்ற வார்த்தைகள் இருந்ததால் 65வது பத்தியை வாசிக்காமல் முழுமையாக கடந்து சென்றார். அரசின் உரையை முழுமையாக படிக்காமல் சில வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்ததாக திமுக கூட்டணி கட்சிகள் குற்றஞ்சாட்டினர்.

இதனிடையே பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஆளுநர் அவர்களுக்கு வரைவு உரையானது, தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்கெனவே அனுப்பப்பட்டு, அவரால் ஏற்பளிக்கப்பட்டு, அதன்பின்னர் அச்சடிக்கப்பட்டு இன்றைக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும், தேவைப்படும் உறுப்பினர்களுக்கு அச்சிட்ட பிரதிகளாகவும் வழங்கப்பட்டுள்ளன. நம்முடைய திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக செயல்பட்டு வரும் மாண்புமிகு ஆளுநர் அவர்களுடைய செயல்பாடுகள், முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில், அரசின் சார்பாக இருக்கின்ற காரணத்தால், நாங்கள் சட்டமன்றப் பேரவை விதிகளைப் பின்பற்றி, ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்னர் எங்களது எதிர்ப்பு எதனையும் நாங்கள் பதிவு செய்யவில்லை.

statement
statement

 

பேரவையிலே மிகவும் கண்ணியத்தோடு, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உரையாற்ற வந்துள்ள மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நாங்கள் நடந்து கொண்டோம். ஆனாலும், எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல – அரசின் கொள்கைகளுக்கே கூட அவர் மாறாக நடந்து கொண்டு, தமிழ்நாடு அரசு தயாரித்து, மாண்புமிகு ஆளுநர் அவர்களால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாக, முழுமையாகப் படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல, சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்றும் ஆகும்.

statement
statement

ஆகவே, சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி, இன்றைக்கு அச்சிடப்பட்டு, மாண்புமிகு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும், அவைக்குறிப்பில் ஏற வேண்டும் எனும் தீர்மானத்தையும்,அதேபோல, இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன். இத்தீர்மானத்தை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறினார். முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கும்போதே ஆளுநர் ஆர்.என்.ரவி கோபத்துடன் பாதியிலேயே பேரவையில் இருந்து வெளியேறினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும்‌ என முதலமைச்சர் பேசியுள்ளார. அரசின் கொள்கை‌ உரையே‌ அவைக் குறிப்பாக இடம்பெற வேண்டும்‌ என்பது‌ சரியான, வரவேற்க வேண்டிய முடிவு. தமிழ் நாடு முதலமைச்சரின்‌ இந்த நடவடிக்கை சட்டமன்ற வரலாற்றில் இதுவரை கண்டிராத‌து. அரசியல் சாசன வரம்பினை மீறி‌ தொடர்ந்து செயல்பட்டுவரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இது பொறுத்தமான‌ பதிலடி.

முதலமைச்சரின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ஆளுநர் அவையில் இருந்து முன்கூட்டியே வெளியேறியுள்ளார்‌. தேசிய கீதத்தை புறக்கணித்து அவமதித்துள்ளார்.‌எதிர்க் கட்சி போல ஆளுநர் நடந்திருப்பது உரிமை மீறல்,‌மிகுந்த கண்டனத்திற்குரியது. அவையில் இருந்து நடையைக் கட்டிய ஆளுநர், மாநிலத்தில் இருந்தே வெளியேற வேண்டும். அதுதான்‌ தமிழ் நாட்டின்‌ விருப்பம்.சட்டமன்றத்தில்‌ எழும்பிய முழக்கம், தமிழ் நாடெங்கும் எதிரொலிக்க வேண்டும்.ஆளுநரின் அடாவடிக்கு எதிரான போராட்டக் களத்தில்‌,‌அனைத்து கட்சிகளும்‌ இணைந்து நிற்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ