சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷ்க்கும் திருமகள் சீரியல் நடிகை ஹரிகாவிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
பெரும்பாலான பெண்கள் தொலைக்காட்சி தொடர்களை விரும்பி பார்ப்பது வழக்கம். பெண்கள் மட்டுமல்ல சில ஆண்களுமே சீரியலுக்கு அடிமையாக இருக்கிறார்கள். சீரியல் நடிகர்களுக்காகவே பல ரசிகர்கள் இருக்கின்றனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து சன் டிவியில் சுந்தரி சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கேப்ரியெல்லா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்த 2 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் கிருஷ்ணா எனும் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிஷ் நடித்து வருகிறார். இவர் தற்போது இலக்கியா சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பான திருமகள் சீரியலில் அறிமுகமானவர் தான் ஹரிகா. நடிகை ஹரிகா ஆரம்பத்தில் தெலுங்கு சீரியல்களில் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரவிஷ் மற்றும் ஹரிகா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர் இவர்களின் காதலுக்கு இரு விட்டார்களும் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த நவம்பர் 19ஆம் தேதி (நேற்றைய முன் தினம்) இவர்களின் நிச்சயதார்த்தம் இரு வீட்டார்களின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களுடைய புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்த ஜோடிக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.