spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதிருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் ரயிலில் புகை !

திருவனந்தபுரம் – சென்னை சென்ட்ரல் ரயிலில் புகை !

-

- Advertisement -

ரயில் எண்12624 திருவனந்தபுரம் – சென்னை சென்ட்ரல் ரயில் -ன் ஏசி பெட்டியில் புகை வந்ததால் நெமிலிச்சேரி அருகே ரயில் நிறுத்தம்

 

we-r-hiring

திருவந்தபுரத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த விரைவு ரயில் இன்று காலை நெமிலிச்சேரி ரயில் நிலையம் அருகே வரும்போது ரயிலின்  பி1 (ஏசி பெட்டி) பெட்டியின் பிரேக் பகுதியில் பெட்டியில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 திருவனந்தபுரம் -  சென்னை சென்ட்ரல் ரயிலில் புகை !

சிறிது நேரம் அந்த பெட்டிக்கு செல்லக்கூடிய மின்சாரம் துண்டிக்கப்பட்டு 20 நிமிடம் காலதாமதமாக அந்த ரயில் நெமிலிச்சேரி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மீண்டும் சென்னைக்கு சென்றது. ஏசி பெட்டியில் இருந்து புகை வந்ததால் இதைக்கண்ட ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்து ரயிலில் இருந்து கீழே இறங்கினர்.

அந்த ரயிலில் இருந்து பதற்றத்தில் இரங்கிய சில பயணிகள் புரநகர் ரயில்கள் மூலம் பயணத்தை மேற்கொண்டனர்.

சிறுது நேரத்தில் சரிசெய்யப்பட்டவுடன் ரயில் புரப்பட்டு சென்றது.

MUST READ