spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகதாநாயகனாக அறிமுகமாகும் விஜய் சேதுபதியின் மகன்.... பூஜை இன்று தொடக்கம்!

கதாநாயகனாக அறிமுகமாகும் விஜய் சேதுபதியின் மகன்…. பூஜை இன்று தொடக்கம்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது தமிழ், மலையாளம், இந்தி என பல படங்களில் நடித்து கலக்கிக் கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஜவான் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து மெரி கிறிஸ்மஸ் திரைப்படம் வெளியாக இருக்கிறது. மேலும் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படத்தில் நடித்து வருகிறார்.கதாநாயகனாக அறிமுகமாகும் விஜய் சேதுபதியின் மகன்.... பூஜை இன்று தொடக்கம்!

இந்நிலையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான சிந்துபாத் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.சூர்யா, விடுதலை 2 திரைப்படத்திலும் விஜய் சேதுபதியுடன் இணைந்து தற்போது நடித்து வருகிறார்.
அதன்படி ஸ்டன்ட் மாஸ்டரான அனல் அரசு இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இது குறித்த செய்திகள் சில மாதங்களுக்கு முன்பாகவே சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.கதாநாயகனாக அறிமுகமாகும் விஜய் சேதுபதியின் மகன்.... பூஜை இன்று தொடக்கம்!

we-r-hiring

இந்நிலையில் PHONEIX என்று தலை படப்பட்டுள்ள புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் பூஜை இன்று சிறப்பாக தொடங்கியுள்ளது. இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த படம் சம்பந்தமான மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சாம்CS இதற்கு இசையமைக்கிறார். ஏ கே பிரேவ் மேன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ