
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (நவ.24) காலை 11.00 மணிக்கு தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, தொழில், முதலீட்டு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜாவின் மகள் நிலா ராஜா பாலு சந்தித்து, டெல்லியில் நடைபெற்ற 66-வது தேசிய துப்பாக்கிச்சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில், ஜூனியர் பெண்கள் பிரிவில் இரண்டாவது முறையாக தங்கப் பதக்கம் வென்றதையொட்டி, சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இந்த சந்திப்பின் போது, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் சர்மிளா ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விக்ரம் நடிக்கும் 62- வது படத்தில் வில்லனாக ஃபஹத் ஃபாசில்
அதைத் தொடர்ந்து, தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த நிலா ராஜா பாலு வாழ்த்துப் பெற்றார்.