நடிகர் மம்மூட்டி நடிப்பில் உருவாகவிருக்கும் பான் இந்தியா திரைப்படம் டர்போ. தரமான ஆக்சன் படமாக இப்படம் உருவாக உள்ளது. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் மம்முட்டி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மயுகம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் மம்மூட்டி நடித்து வெளியாகிய “காதல் தி கோர்” திரைப்படம் மசாலா காட்சிகள் ஏதும் இல்லாமல் ஒரு கிளீன் திரைப்படமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே எந்த ஒரு ஹீரோவும் ஏற்று நடிக்க தயங்கும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தை மம்முட்டி ஏற்று நடித்து பாராட்டுகளையும் பெற்று வருகிறார். சென்ற மாதம் வெளியான மம்மூட்டியின் “கண்ணூர் ஸ்குவாட்” திரைப்படமும் மாபெரும் வெற்றி படமாகவே அமைந்தது. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் மம்முட்டி அடுத்ததாக களமிறங்கும் டர்போ படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மோகன்லால் நடிப்பில் உருவான புலி முருகன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது. அந்தப் படத்தை இயக்கிய இயக்குனர் வியாஷக் தான் டர்போ படத்தையும் இயக்குகிறார்.
படத்தின் ஒவ்வொரு அப்டேட்டாக அடுத்தடுத்து வெளிவர உள்ளன. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று (26.11.23) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்புக்கான ஸ்பெஷல் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. ஜஸ்டின் வர்கீஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அஞ்சாம் பத்திரா என்ற மாபெரும் வெற்றி பெற்ற திரில்லர் படத்திற்கு கதை எழுதிய மிதுன் மானுவேல் தாமஸ் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
- Advertisement -